மேலைப்புலோலி
சதாவதானி கதிரைவேற்பிள்ளை சனசமூக நிலையத்தின்
நிலைய கீதம்
....................
பல்லவி
வாழ்க! வாழ்க! என்று வாழ்த்துவோம்
எங்கள் மேற்புலோலி வந்த நல்ல சனநிலையம்
அனுபல்லவி
ஏழ்கடல்சூழ் உலகமதில் எட்டாங்கடலெனவுதிந்த
இனியசதா அவதானி புனிதகதிர் வேலர்புகழ்-வாழ்க!
சரணம்
முத்தமிழின் கடல் குடித்த உத்தமர்கள் மத்தியிலே
முன்னைத்தவத் தாலுதித்த அன்னையப்பன் மெய்யடியார்
தத்துவமெஞ் ஞானிகள்நற் சான்றோர்கள் ஆக்கிவைத்த
தண்ணிலவின் புகழ்விரிக்குஞ் சனசமூக நன் நிலையம் வாழ்க
நாள் மாதம் வருடங்கள் பல்லாண்டாய் ஆற்றிவரும்
ஞானகுரு பூசைகலை நிகழ்ச்சியுயர் சிரமணி
தாளாண்மை பெற்றுயர்ந்த வேளாண்மை ஊக்குவிப்பு
தையோடு சித்திரைசேர் பொங்கல் விழா சகலமுமே-வாழ்க
தாழாத மனவுறுதி தன்மானம் புரிந்துணர்வு
சாயாத நீதியுயர் தலையாய பொதுநலத்தின்
ஓயாத முயற்சியெலாம் உயிராகக் கொண்டொழுகும்
உயர் கருமப் பணிகளுக்களுக்கோர் உரைக்கல்லாம் இந் நிலையம்-வாழ்க
தெய்வபக்தி தேசபக்தி தெளிந்த ஒரு சீடர்பக்தி
செல்வமொடு கல்விதிகழ் வீரமெலாந் திரட்டிநிதம்
மெய்மையொளி மேலான பொன்னிலையம்
விண்ணவர் தம் அமிர்தமெனம்ண்ணுலகோர் போற்றுவரே-வாழ்க
மக்களுக்காய் ஆற்றுதொண்டு மகேசனுக்கே ஏற்ற தொண்டு
தக்கபெரியோருரைத்த சான்றமணிவாக்கதனை
மிக்க மதித் தாற்றுகின்ற மேன்மைநிறை எம் நிலையம்
மேருமலைத் தீபவொளி விரித்திலங்க வேண்டுவமே-வாழ்க
மனக்கமலம் மலரவைக்கும் மாகதிரேசன் நூல்நிலையம்
மாணறிவுக் கருவூலம்: மலர்த்தேவி கலைப்பீடம்
சனர்குதவு சஞ்சீவி: விண்ணமுகப் பொற்சுரபி
தண்ணிழ்ற்கோர் கற்பகதரு: தாங்குவதே நங்கடமை-வாழ்க
இயற்றியவர்: பண்டிதர் க. த. ஞானப்பிரகாசம்
அல்வை,
நா.கதிரைவேற்பிள்ளை
தோற்றம்:1871 மறைவு: 1907

நிலைய கீதம.