நா.கதிரைவேற்பிள்ளை

தோற்றம்:1871 மறைவு: 1907

விதிமுறை 01

4.4 ஆட்டத்தில் முதல் புக தேர்ந்தெடுக்கப்பட்ட அணி முத்ல் 7 நிமிடங்கழுக்கும்
தொடர்ந்து மீண்டும் மீண்டும் புகுந்துகொண்டே இருப்பர் [அதாவது பழம் எடுத்தால்
அல்லது பட்டால் அவ்விளையாட்டில் தோல்வி எனின்] அடுத்த 7 நிமிடத்தில்
[அணி மாறுதலுக்கு 1 நிமிடத்திற்குள்] காப்போர் புகத்தொடங்குவர்.


4.5 இழந்த நேரம் [Loss of Time ] ;- ஆட்ட நேரத்தின் போது பிரத்தியேக
காரணங்கழுக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டிருந்தால் , அவ்வாறு செலவழிக்கபட்ட
நேரம் குறிப்பிட்ட ஆட்டத்திலேயே சேர்க்கப்படும்.


4.6 சமநிலை தவிர்தலுக்கான அதிகரித்த நேரம் ;-
[Time of Extension for Tie Breaking]

வழமையான ஆட்ட முடிவில் பழங்கள் இரண்டு அணிக்கும் சமமாயின் மேலும் 5
நிமிடங்கள் ஒவ்வொரு அணியும் ஆட்டத்திலீடுபடும் . எழுமானாக புகுதல் , மறித்தல்
தீர்மானிக்கப்படும் . பக்கம் மாறுவதற்கு இடைவேளை 1 நிமிடம் தொடர்ந்தும் சமநிலை
காணப்படின் சமநிலை த்விர்க்க வேண்டுமாயின் அதுபற்றி போட்டி
ஒழுங்கமைப்பாளர்கள் முடிவு ஏற்கனவே அறிவித்தல் வேண்டும் .



05. விளையாட்டு ;-


இவ்விளையாட்டில் (1) புகுதல் (2) காத்தல் அல்லது மறித்தல் அல்லது தடுத்தல் (3)
கிளிபாய்தல் ஆகிய முக்கிய மூன்று அம்சங்கள் உண்டு .அவற்றின் ஒழுக்க விதிகள்
பின்வருமறு .

5.1 புகுதல் - கிளி சொன்னதும் முன்விடந்தையில் உள்ள அணியினர் (ஆறு வீரர் )
காய்களாகுவர் .


5.2 காய்கள் காவற்சுவடுகளைத்தாண்டிச் செல்ல இறங்குவர் .(புகுவர்) இவ்வாறு புகும்
போது காவற் சுவடுகளில் நின்று மறிக்கும் காப்போர் கையிலும் , கிளிக் கோடுகளில்
ஓடும் கிளியின் கையிலும் படாது காவற் சுவடுகளைத் தாண்டிச்செல்ல வேண்டும் .


5.3 காய் காவற் சுவட்டைத்தாண்டி "பின் விடந்தையை" அடைந்த்தும் பழம் என
உரித்துடையதாகும் .


5.4 காய்கள் முன் காவற் "சுவட்டைத் தாண்டி" இறங்கிய பின்னரே பழம் ஏறலாம் .


5.5 பழமாக ஏறியவர் காவற்சுவடுகளைத்தாண்டி முன் விடந்தையை அடைந்தால் ஒரு
பழம் ஆகும் .


5.6 புகுவோர் மறிப்பவருக்கு மிகவும் அண்மையாக அங்கங்கள் தொடக்கூடியவாறு நின்று
விளையாடக்கூடாது .


5.7 புகுவோர் மறிப்பவருக்கு இடைஞ்சலாக இருத்தல் கூடாது .



5.8 புகுவோர் இன்னொருவருக்குள் மறைந்து தப்பிச் செல்லுதல் கூடாது .


5.9 புகுவோர் கிளியின் கரைச்சுவடுகளிலோ காவற்சுவடுகளிலோ மிதிக்கக் கூடாது .


5.10 காயும் பழமும் ஒரே சுவட்டுத்தட்டுகளில் நிற்கும் போது கிளியின் நடுச்சுவடு
இவர்களில் ஒருவருக்கும் உரித்தலாகாது .


5.11 ஒரே தட்டில் காயும் பழமும் சேர்வது (காப்பது ) தவறு . இது காயும் பழமுமாகும் .


06. காத்தல் (மறித்தல் /தடுத்தல் )


6.1 காப்போர் முன் சுவட்டைத் தவிர்ந்த ஏனைய காவற்சுவடுகளில் ஒவ்வொருவராக
நின்று காயையோ அல்லது பழத்தையோ அல்லது இருவரையும் மறிக்கலாம் .


6.2 மறிக்கும் போது காப்போர் தனது சுவட்டிற்கு வெளியே கால் வைத்தல் தவறு .


6.3 ஒரு ஆட்டவேளையில் காப்போர் சுவடு மாற முடியாது .


6.4 காப்போர் புகுவரை கைவளம் மாறி அடிக்க ( தொட ) முடியாது . ( இடதுபக்கத்தால்
புகுந்தால் இடது கையாலும் வலது பக்கத்தால் புகுந்தால் வலது கையாலும்
அடிக்க வேண்டும் .) கை தவிர்ந்த வேறு அவயங்களால் அடித்தல் தவறாகும் .


6.5 புகுவோரை சுவட்டைத் தாண்டும் போது மட்டும் அடிக்கலாம் . தாண்டுவதற்கு முன்போ
அல்லது தாண்டியதன் பின்போ அடித்தல் கூடாது .