நா.கதிரைவேற்பிள்ளை

தோற்றம்:1871 மறைவு: 1907

கிளித்தட்டு


அறிமுகம்


கிளித்தட்டு எங்கள் ஊர் விளையாட்டுக்களில் ஒன்று.சிறுவர் தொடக்கம் வயதோர்
வரை பலரும் இதை விளையாடுவார்கள்.இடத்திற்கிடம் இதன் பெயர் விளையாட்டு முறை என்பன
வேறுபட்டுள்ளன."யாடு" "தாச்சி" என்றும் இவ்விளையாட்டினை சில கிராமங்களில் அழைப்பார்கள்.
மைதானம் பற்றிய அளவுகள், மைதான நிலையங்களின் பெயர்கள் "கோடு ஏறல்", "பழம் எடுத்தல்",
"கிளிபாய்தல்", "காத்தல்", "புகுதல்" முதலிய சொற்களின் விளக்கமும் பயன்பாடும் இடத்திற்கிடம்
வீத்தியாசமாக உள்ளன.


விவசாயிகளின் ஒரு கலாச்சாரத்தை கிளித்தட்டு பிரதிபலிகின்றது. நெல் விதைத்த
காலங்களில் வயற்தட்டுக்கைளில் நெல்விதையைப் பொறுக்க வரும் கிளிகளை கமக்காரன் வரம்புகளில்
ஓடிக் கலைத்து வயலைக் காக்கும் செயற்பாட்டை இவ்விளையாட்டில் காப்போர் கமக்காரர்களாகவும்,
புகுவோர் கிளிகளாகவும், தட்டுக்கள் வயல்களாகவும், சுவடுகள் வரம்புகளாகவும் பாவனை
சொய்யப்படுகிறது


நமது தேசத்தின் கலாச்சாரத்தோடு ஒட்டியதும் செலவுச் சிக்கனமானதும் பல்ரும்
வீளையாடியும் பார்த்தும் களிக்கக்கூடியதுமான இவ்வீளையாட்டு பிரபல்யம் அடைய வேண்டும் என்பது
நமது அவா தேசிய மட்டத்தில் விளையாடக் கூடியதான பொதுவான சொற்பிரயோகங்களையும்
குறிப்பான விளக்கங்களையும் நியமன விதிகளையும் அமைப்பது அவசியமாகின்றது.

மைதான நிலையங்களின் பெயர்களாக சுவடு, விடந்தை, தட்டு முதலிய சொற்கள்
பயன்படுத்தப்படுவது விவசாய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக அமையும்


இவ்விளையாட்டில் "புகுதல்", "காத்தல்" என இரண்டு முக்கிய திறன்கள் உண்டு. சில
அணியினர் "புகுதலை", "காத்தலிலும்" திறமையாகச் செய்வர். இவர்கள் "புக" ஆரம்பித்தால்
தொட்ர்ந்து புகுந்துகொண்டே இருப்பர். காக்கும் அணியினர் கூடுதாலன நேரம் காக்க வேண்டி
நேரிடும். இக்குறைபாட்டைத் தவிர்த்து ஒவ்வொரு அணியினருக்கும் "புகவும்" "காக்கவும்" சம
நேரத்தினை கொடுப்பதற்காக் "ஆட்டம்" (innings) முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


அடுத்து இவ்விளையாட்டில் "அழாப்பல்" அதிகம் உண்டு. கையால் தொடாது "அடி" என
பலத்த சத்தம் போடுவது, "கோடு ஏறிவிட்டார்" எனப் பிழையான காலடியைக் காட்டுவது, தப்பு
சொல்லி "ஏமாற்றுவது" போன்ற பல சம்பவங்கள் ஏற்படுவது உண்டு. இவற்றால் நடுவர்களும்,
மத்தியஸ்தர்களும் எத்துப்படுவதும் உண்டு இவற்றை இயன் அளவு தவிர்ப்பதற்காக
அவதானிகக்கூடியதும் நடை முறைப்படுத்தக் கூடியதுமான பொதுவிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.