நா.கதிரைவேற்பிள்ளை

தோற்றம்:1871 மறைவு: 1907

விதிமுறை 02


6.6 வீழுந்து அடிக்கக்கூடாது. அடித்தவுடன் விழவும் கூடாது.அடித்த பின் நிலத்தில் கை
பதிதல் தவறாகும்
6.7 அடிக்கும் போது, அடித்தபின்பும் மறிப்பவரின் கால்கள் காவசுவட்டைத் தாண்டலாம்.எக்காரணம்
வேண்டும்.
6.8 மறிப்பவர் சுவடு தவறி நிற்பின் காயோ, பழமோ சுவட்டைத் தாண்டலாம் .எக்காரணம்
கொண்டும் பலாமாக அடித்தல் தண்டணைக்குரிய குற்றமாகும்.

07 கிளி பாய்தல் :

7.1. கிளிக்கு முதற் சுவடு , கடைச்சுவடு, கரைச்சுவடு, நடுச்சுவடு ஆகியவற்றில்
நடமாடும் (விளையாடும்) உரித்து உண்டு.
7.2 கிளிமுதற் டுசுவட்டில் நடுவில் நின்று கிளி செல்லுதல் வேண்டும்.
7.3 கிளி எனக் கூறியதன் பின் கிளி நடுச்சுவட்டில் மூண்றாம் கிடைச்சுவட்டின் சந்தியை
(முள்ளி) தாண்டியபின் அடிக்கும் உரிமையைப் பெறும்.
7.4 சுவடு தவறாது பாய்ந்து அடிக்கும் உரிமை கிளிக்கு உண்டு. சுவடுகள் விலகி ஓடி
அடித்தல் தவறாகும்
7.5 கிளி எக்கையாலும் அடிக்கலாம். வேறு எந்த அங்கமும் பாவிக்கக் கூடாது.
7.6 முதற்டுவட்டில் பழத்தைப் மாறிக்கும் போதும் பூட்டுக்கள் போடும் போதும் கிளி தரித்து
நிற்கலாம். வேறு எந்த சந்தர்ப்பத்திலும் தரித்து நிற்றல் கூடாது.
7.7 புகுவோர் தவறுதலாகவேனும் கிளியில் தொடுவாராயின் அவ்வணி ஆட்டம் இழக்கும்.
7.8 கிளி தான் நடமாக்கூடிய பகுதிகளில் இருந்து புகுவோரை எங்கும் அடிக்கலாம்

08 பூட்டு ஏற்படல்.
இவ்விளையாட்டில் மூன்று வகைப் பூட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு . அவையாவன, காய்ப்பூட்டு,
தெத்துப்பூட்டு ஆகும்.
8.1 காய்ப்பூட்டு :-ஓரு தட்டில் ஓன்றிற்கு மேற்பட்ட காய்கள் நின்று காக்கப்பட்டால் அது
காய்ப்பூட்டு ஆகும்
8.2 பழப்பூட்டு :- ஓரு தட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட பழங்கள் நின்று காக்கப்பட்டால் அது
பழப்பூட்டாகும்
8.3 செத்துப்பூட்டு :-காய்(கள்), பழம் (கள்) குத்தெதிர்த்தட்டுக்களில் தெத்து மாறி
நிற்கும் போது கிளி நடுக் கோட்டில் தரித்து நின்று அமைக்கும் தடுப்பு தெத்துப்பூட்டு
ஆகும்.


09 கோடு ஏறுதல்
9.1. காயோ பழமோ தன் முன்னாலுள்ள சுவட்டைத் தாண்டுவதற்கு முன்னர் அச்சுவட்டைத்
தொட்டு அல்லது முதித்து தாண்டாது விடுவது தவறாகும்
9.2. காயோ பழமோ தான் தாண்டி சுவட்டைப் பின்னடித்தல் (திரும்பிச் செல்லல்)
தவறாகும்


10 புறக்கோடு
10.1 காயோ பழமோ கிளியின் கரைச்சுவடுகளை,முன் பின் விடந்தைகளின்
மூலைக்கோடுளை மிதித்தல் (தொடுதல்) அல்லது அவற்றிற்கு அப்பால் செல்லுதல்
தவறாகும்

11. முள்ளி பாய்தல்
காயோ பழமோ தட்டொன்றை மிதிக்காது அடுத்த தட்டிற்கு பாய்வது முள்ளி பாய்தல்
எனப்படும்
11.1 காய் அல்லது பழம் காப்பாவரால் அல்லது கிளியால் வீதிகளுக்கமைய அடிபட்டால்.
11.2 முள்ளி பாயும் போது நடுச்சுவட்டிலோ காவற்சுவட்டிலோ மிதிக்காது பாய்தல் வேண்டும்.