நா.கதிரைவேற்பிள்ளை

தோற்றம்:1871 மறைவு: 1907

விதிமுறை


மைதானஅளவு மற்றும் விதிமுறைகள்

1.1 மைதானம் 56"x33" நீள அகலமுடைய நீள்சதுரமாகும்.
1.2 1 அடி அகலமான 6 சுவடுகள் உண்டு. இவை முதற்சுவடு (முதலாவது)
இடைச்சுவடுகள் (நான்கு) கடைச்சுவடு (கடைசியானது) ஆகும்.
1.3 கிளி ஓடுவதற்கு 1 அடி அகலாமன கரைச்சுவடுகள் இரண்டும் ,நடுச்சுவடு ஓன்றும்
உண்டு.
1.4 சுவடுகளை ஆக்கும் கோடுகளினது வெளிப்பக்க விளிம்புகள் மேற் குறிப்பட்ட
அளவுகளில் அடங்கும்.

1.5 10அடி நீளத்திற்குக் குறையாத மூலைக்கோடுகளில் ஆக்கப்பட்ட முன் விடந்தை,
முன் விடந்தை என இரண்டு உண்டு. இக்கோட்டின் தடிப்பு 2" ஆகும்

1.6 சுவடுகளிற்கிடையேயுள்ள பரப்புகள் தட்டுகள் எனப்படும்.

1.7 காவற் சுவடுகள் 33"x1"
கிளிச்சுவடு 56"x1"
மூலைக்கோடு 10"க்கு மேல்



02 ஆளணி (அணி வீரர்கள்)

2.1 அணி(குமு) :- ஒவ்வொ.ன்றும் ஆறு விளையாட்டு வீரர்களைக் கொண்ட இரண்டு
அணிகளுக்கிடையே இவ்விளையாட்டு நடைபெறும்.
2.2 காப்பவர் (மறிப்பவர்/ தடுப்பவர்):-இவர்கள் காவற்சுவடுகளில் நின்று காய்களையும்
பழத்திற்காக இறங்குபவர்களையும் (புகுவோர்)
பழம் பெற விடாது மறிப்பவர்கள்
2.3 புகுவோர் :- முதற்சுவட்டினூடாக (காய்கள்) பழம் எடுப்பதற்காக சுவடுகளைத்
தாண்டிச் செல்வோர்.
2.4 கிளி :-முதற்சுவட்டில் நின்று காக்கவும், முதற்சுவடு, கடைச்சுவடு,
கரைச்சுவடுகள் நடுச்சுவடு ஆகியவற்றில் ஓடி எதிரணியை பழம் எடுக்க
விடாது தடுப்பவர்.
2.5 பதிலாட்டக்காரர்கள் :-ஓவ்வொரு அணியும் 5 பதில் ஆட்டக்காரரின் பெயர்களை
அணிப்பட்டியலில் (தனியாக) சோர்த்துக் கொள்ளலாம்
ஆனால் இரண்டு வீரர்களை மாத்திரம் பதில் ஆட்டக்காரராக
மாற்ற முடியும்.


03 3.1 உடை :-ஓவ்வொரு அணியும் பொதுவாக பொருத்தமான (ஓரே நிற்ம்,கெளரவமான
அமைப்பு ) சீருடை அணிதல் வேண்டும்.கிளி தனியான(அடையாளம்
கூடியதாக) நிறத்தில் சீருடை அணிதல் வேண்டும்.
3.2 இல்க்கம் :-கிளி இல்க்கம் 1 அணிந்திருத்தல் வேண்டும். ஏனைய காப்போர் தங்களது
இலக்கங்களை முதற்சுவட்டில் 2 இலிருந்து ஓழுங்காக தங்களது சுவட்டு
ஓழுங்குகளின்படி அணிந்திருத்தல் வேண்டும்.தெளிவாகத் தெரியக்
கூடியதாக தமது மார்பிலும், முதுகிலும் இல்க்கங்களை அணியப்படுதல்
வேண்டும்.


04 ஆட்டம்
4.1 ஆட்டநேரம் :-ஒரு போட்டி இரண்டு 15 நிமிட விளையாட்டு வேளைகளையும் ஓரு
நிமிட இடைவேளைகளையும் கொண்டுருக்கும் 15 நிமிட விளையாட்டு
வேளை ஓவவொன்றும் 7 நிமிட ஆட்டங்களைக் (Innings)
கொண்டிருக்கும். 1 நிமிடம் அணிகள் மாறுபதற்கு வழங்கப்படும்.
மொத்தமாக ஒரு போட்டியின் ஆட்டவேளை 15-05-15 நிமிடங்கள்.
4.2 எவ்வணிபுகுவது /காப்பது என்பது தீர்ப்பாளரால் எழுமானமாக(Toss)
தீர்மாணிக்கப்படும்.

4.3 ஆட்டம் ஆரம்பம்:- ஆரம்பிக்கும்போது புகும் அணி முன்விடந்தையில் நிற்பவர். காக்கும்
அணியினர் காவற் சுவடுகளில் ஓவ்வொருவராக நிற்பர். கிளி முன் சுவட்டின் மத்தியில்
நிற்பர்.தீர்ப்பாளர் வீசில் ஊதிய பின் "கிளி" "கிளி" எனத் தெளிவாக உரத்துச்
சத்தம் இட்டதும் ஆட்டம் ஆரம்பிக்கும்.