நா.கதிரைவேற்பிள்ளை

தோற்றம்:1871 மறைவு: 1907




தம்பசெட்டி மாயக்கை சித்திவிநாயகர்
மீது அமரர் சைவப்புலவர் சி.அருளம்பலம்
அவர்களால் பாடப்பட்ட திருவடிப் பதிகம்


ஒம் கணபதி வருக உயர்குண பதியாதி
ஒரெட் டெமுத்தானவா
உன்பதத் தீரைந்து கவிமதுர மொகுபாட
ஒங்கு சரஸ்வதி என்னாவில்
ஆமென உதித்தருஞ் சொற் சுவை பொருட்சுவைகள்
அணிசாந்த முடன் அமையவும்
அடியேனை நின் மூன்று விழியினாற் பார்ர்த்து
அருள் சுரக்க மீ(சி)க மீதிலே
வாமதேவன் பெற்ற தந்திமுக வெந்தையே
வரவேணு மிதுதருண மையா
மாதுய ரடைந்தனன் மாநிலந்தனில்வேறு
வழியொன்று மறிகிலேனே
தேம்பியமு துன்றனடி சேர்ந்து கும்பிட்டவென்
துயரெலாந் தீர்த்த ருள்வாய்
திருவிளங்கும் தம்பை மாயக்கைவாழ்
சித்தி விநாயகக் கடவுளே




கற்பகப் பிள்ளையே கதிதருங் கடவுளே
கடையனே வினைக ளோட
கடைக்கணித் தருளிக் கடாட்சிக்க வருவாய்
கணேச உன்னடிக் கபயமே
சொற்றுனைநீ பவப்பற்றறுத் தென்னை யாள்வாய்
தொண்டனேன் துயர னைத்தும்
சொல்லிநின் சந்நிதி முன்னின்று துதி செய்தனன்
துகள்பட வென்றுயரை யோட்டி
கற்றிலன் நாயினேன் கேட்பனவு மறிகிலேன்
காசினியில் வாழ்வு பொய் எனவும்
கருதிடாப் பாவியேனை ஜங்கரத் தினாற்
கடாட்சிக்க வேண்டு மையா
சிற்றறினவ யுனடயனேன் ஈடேற வருள்வாய்
திசை முகன் தனக்கு மருகா
திரு விளங்கு தமம்பை மாயக்கை வாழ்
சித்தி விநாயக் கடவுளே

அகமிக மெலிந்து அடிவந்து கும்பிட்டனன்
அதிகப் படுந்துய ரினால்
ஜங்கர அங்குசா நின்மன மிரங்குவாய்
அடியன் நின்மைந் தனன்றோ
குக பிரான் அண்ணா வெனகடவ வள்ளியைக்
கூட்டி நீவிட வில்லையோ
குவலயத் திருந்து ஒளவையை யிருவர் முன்
கயிலையிற் கொடுபோய் விடவில்லையோ
மகவென்ற ஆசையென் மேல் உனக்கில்லையோ
மடைய னென்ற் வெறுப்போ
வருகின்ற பழிபாவ மனைத்தும் நின்பாரமென
வைத்து முறையிட் டுருகினேன்
செகமீதி லடியன் செய் பிழையெலாம் பொறுத்தெனது
தீவினைக ளோட வருவாய்
திரு விளங்கு தம்பை மாயக்கை வாழ்
சித்தி விநாயகக் கடவுளே


இருளென்ற சாகரத்டனில் வீழ்ந்து சேற்றினில்
இருத்தி விடு கம்பமது போல்
ஏழையேன் மிடி நோயெனுந்தடங் குழியில் வீழ்ந்து
ஏங்கிப் புலம்பி நாளும்
மருளென்ற கொரு மூன்று பேய் பிடித் தெனையாட்டி
வருத்துதே மனமிரங்கி
வந்துகரி மீதினில் எந்தனிரு கண்காண
மாதுய ரகற்றி விடுவாய்
அருளென்ற ஆனந்த மழை பொழியு மேகமே
அடியன் நின்னடிக் கபயமே
அன்ற சுரன் கும்பியில் தலைகொய்ய முண்டமாய்
அவதரித் தவனை வென்றாய்
தெரிவைர்கள் சித்தியும் புத்திவல் லபையுங்கட்டும்
தெய்வமே உனை நம்பினேன்
திருவிளங்கு தம்பை மாயக்கை வாழ்
சித்தி விநாயகக் கடவுளே


கான்படும் வேடர்வலை தான்பட்ட மான்போல்
கலங்கி நின்றேன் புவியினில்
கண்மூன்றினால் நோக்குக் கடையனேன்
கவலை தீர்த்தெனை யாளுவாய்
தோன்முகன் றனை வதைத்துத் தேவரைக் காத்தவா
சோதி நீயாதி பரனே
துங்கசுப் பிரணியன் புவிவலம் வருமுன்
தூய மாங்கனி பெற்றவா
ஆன்ம கோடிக ளெல்லம் நின்மக்கனல்லவோ
அவற்றில் யானொருவ னன்றோ
ஒளவை நக்கீரர் முதல் அடியார்நின் சொந்தமே
அடியன் பிறனோ கூறுவாய்
தேனமிர்தம் அருளெனது சிந்தையில் தந்தருளும்
தேவ தேவற்கு முதல்வர்
திரு விளங்கு தம்பை மாயக்கை வாழ்
சித்தி விநாயகக் கடவுளே


முக்கனியும் அவல்பயறு கடலைபொரி யப்பமும்
மோதகம் கற்கண்டு வடையு
முன்மூன்று விழிகாண நிவேதனம் மனோபூசை
யுட னடியேன் புரியவும்
இக்கனி யுகந்தனில் ஏழைக் கிரங்கியருள்
ஈசனே மகேசன் மகனே
எலி ரூபமா கவும் அரன் தேரி லச்சதை
இடியுறப் பொடி செய்தவா
மிக்கவொரு கொம்பினை முறித்துயர் மேஞவில்
மேவு பாரதம் வரைதாய்
வீரன் சிந்தூரனையே திலகமாய்க் கட்புவியில்
வைத்த விநாயக மூர்த்தியே
திக் கெட்டு மூவுலகும் முந்துதிசெய் முதல்வனே
சிறிய ன்நின் அடைக்க லம்காண்
திருவிளங்கு தம்பை மாயககை வாழ்
சித்தி விநாயகக் கடவுளே

அண்ட பகிரண்டமு மெங்கு மொளித்தீபமாய்
அரியயன் தேவ ராகி
அற்பு தானந்த செயசத்தியாய் முத்தியாய்
ஆதிசீலக் கடவுளாய்
தொண்டருக்குத் தொண்டனாய் நின்வர மருளும்நீ
துட்ட னெனையும் கடைக்கண்
தும்பிமுக பார்த்தெனது துயரெலா மோட்டிநின்
தூய வருளீய வருவாய்
பெண்டு பிள்ளைக ளொன்ற் சந்தை யுறவில்
பாசப்பிசா செனைவிட் டோடவே
பேர்பெற்ற கரிமீதில் நேரிலென் கண்காண
பெரியப் பனேவரு குவாய்
திண்டாடி யோடசுரர் கண்டதுண்டத்தைச் செய்த
செந்தி வேல்முன் வந்தவா
திருவிளங்கு தம்பை மாயக் கைவாழ்
சித்தி விநாயகக் கடவுளே.

வேன் படு குன்றுபோல் நான்படு துயரெலாம்
விழி மூன் றினல் கண்டுநீ
விலக்கியெனை யாளாது யார்னோல மிடுவதும்
விளையாட் டதோ வுனக்கு
கூன் குருகு செவிடோ என்குரல் கேட்கவிலையோ
குஞ்சர முகக் கடவுளே
கொடிய க் ஜ முக வனைக் கொன்று அமரர்சிறை மீட்ட
கொம் பொன்னற யுடைய கோனே
ஏ னென்று என் முகபார்த் துன்னைங்கரத் தாலனணத்து
இனிய வர மருள் தருவாய்
ஏழையான நின்னடியாக் கடியனாய் ஏவல் செய்
இதுசமயம் வரவே ணுமே
தேன்பாடு மலர்மாலை யணியுமணி மார்பனே
சிறியன் நின் னனடக்க லங்காண்
திரு விளங்கு தம்பை மாயக் னகவாழ்
சித்தி விநாயகக் கடவுளே


சிந்தித் துன்நாமத்தை வந்தித்துக் கண மூடிச்
சிறியே னிருக்க வென்றால்
தீயகள்வரா மைந்துபேர் வந்தெனைக் கட்டி
தேச மெங்கு மிழுக்க
அந்தோ வுனக்கபயம் ஜயாவைங் கள்வரையும்
அடங்குவ துநின் பாரமே
அரகரா சிவசிவா ஓம்மகா கணபதி
அடியேனைக் காத்தரு ளுவாய்
அந்தகன் தூதரும் பாச சூலத்துடன்
ஜயவெனைக் கட்ட வருமுன்
ஆகுமீ தாரோகணிந் துன்கணத்துடன்
அடியன்முன் னெதிர்வரு குவாய்
தித்திமென வந்து நடனமாடித் துதிசொயடியார்
தீவினை யகற்றி யருளும்
திருவிளங்கு தம்பை மாயக் கைவாழ்
சித்தி விநாயகக் கடவுளே.


உனதுதிரு வடிதனில் எனதுமன தனுதினமும்
உருகி யுருகிப் பணிந்து
ஓதியதி காதலொடு பாடவர மேயருள்
ஒற்றை மணிக்கோ டுடையவா
தினகரன் தந்த ஜங்கரனே சிறியனும்
தினகத்தி ளித்தோன் புவியினில்
சிதைபட்டு நிலைகெட்டுத் தீதிலநின் திருவடியில்
தெய்வமே வந்த டைந்தேன்
சினம் போக்கிப் பவம்நீக்கித் தவநிலை யருளவும்
தேவநின் கணங்க ளுடனே
சித்தியும் புத்திவல் லபவை பங்கில் மேவவும்
சிறியன் கண்காண வருவாய்
செனன மாகிய பெரும்பிணி நீக்கி யெனையான்
ஜெகமீதி லுனை நம்பினேன்
திருவிளங்கு தம்பை மாயக் கைவாழ்
சித்தி விநாயகக் கடவுளே.